மாண்புமிகு தமிழக முதல்வர்
திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு,
- கடந்த நான்காண்டு ஆட்சியில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களின் விளைவாக கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MOU) எத்தனை?
- அந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் எவ்வளவு முதலீடாக மாறியிருக்கிறது?
- அதனால் தமிழ்நாட்டிற்கு கிடைத்த வேலைவாய்ப்புகள் மற்றும் பலன்கள் என்னென்ன?
இந்தியக் குடிமகனாக, தமிழ்நாட்டின் சாமானியனாக, இதைக் கேட்பது எனது அடிப்படை உரிமை. அரசு இவைபற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்! இந்த இணைப்பின்மூலம் எனது தகவல் அறியும் உரிமைக்கு பதில் வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.